×

சிவராஜ்குமாருடன் யஷ் திடீர் சந்திப்பு

பெங்களூரு: பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமாரை நடிகர் யாஷ் படப்பிடிப்பில் நேரில் சந்தித்துள்ளார். சிவராஜ்குமார் தற்போது தனது 131வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் கார்த்திக் அத்வைத் இயக்கி வருகிறார். சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார்.  கார்த்திக் அத்வைத், ஏற்கனவே தமிழில் விக்ரம் பிரபு, வாணி போஜன் நடித்த ‘பாயும் புலி நீ எனக்கு’ என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கேஜிஎஃப் படம் மூலம் புகழ்பெற்ற நடிகரான யாஷ், சிவராஜ்குமாரை திடீரென படப்பிடிப்பில் நேரில் சந்தித்துள்ளார். கன்னட சினிமாவின் இரு உச்ச நடிகர்கள் நேரில் சந்தித்துக் கொண்டது அவர்களது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட சினிமாவில் புது படங்களை ஓடிடியில் வாங்க மறுப்பது தொடர்பான பிரச்னை குறித்து அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

The post சிவராஜ்குமாருடன் யஷ் திடீர் சந்திப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Yash ,Shivrajkumar ,Bengaluru ,Sivarajkumar ,Karthik Advait ,Sam CS ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு...