×

ரூ.9 கோடி கார் வாங்கிய அஜித்

சென்னை: அஜித் பிசியாக நடித்து வந்தாலும், தனக்கு ரெஸ்ட் கிடைக்கும் நேரங்களில் பைக் ரைடிங் செல்வது, கார் ரேஸ் செல்வது என தனக்கு பிடித்தவற்றை செய்துவருகிறார். பைக், கார்கள் மீது அவருக்கு அதிக பிரியம் என்பதால் தன் வீட்டில் புதுப்புது கார் மற்றும் பைக்குகளை வாங்கி அடுக்கி வைத்திருக்கிறார் அஜித்குமார். அவரின் லிஸ்ட்டில் லேட்டஸ்டாக ஒரு சொகுசு கார் ஒன்று இணைந்திருக்கிறது.

அதுதான் Ferrari sf90 stradale கார். இந்தக்காரை தான் தற்போது சொந்தமாக வாங்கி இருக்கிறார் அஜித். இந்த காரின் விலை ரூ.9 கோடி. இதில் 2 பேர் மட்டுமே பயணிக்க முடியும். தன்னுடைய காதல் மனைவி ஷாலினி உடன் ரொமாண்டிக் ரைடு செல்வதற்காக இந்த காரை அஜித் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த காருடன் அஜித் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

The post ரூ.9 கோடி கார் வாங்கிய அஜித் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ajith ,Chennai ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அஜித் சமையலை இன்னும் சாப்பிடவில்லை: லைலா