×

அஜித் சமையலை இன்னும் சாப்பிடவில்லை: லைலா

சென்னை: விஜய்யுடன் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என்ற படத்தில் நடித்துள்ள லைலா கூறியதாவது: பிரசாந்த் ஒரு சாக்லெட் பாய். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரும், நானும் டாம் அன்ட் ஜெர்ரி போல் ஒருவருக்கொருவர் கேலியும், கிண்டலும் செய்வோம். டான்ஸ் மாஸ்டரும், நடிகருமான பிரபுதேவா, படத்தில் நடிக்கும் அனைவரும் மிகவும் நேர்த்தியாக ஆட வேண்டும் என்று எதிர்பார்ப்பார். அவர் இருக்கும் இடத்தில் ஒருவிதமான ஈர்ப்பு இருக்கும்.

அஜித் குமார் ருசிகரமாகச் சமைப்பார். ஆனால், இதுவரைக்கும் அவர் சமைத்ததை நான் சாப்பிட்டது கிடையாது. பார்க்க ஸ்ட்ரிக்ட் போல் தெரியும் சூர்யா, உள்ளுக்குள் ரொம்ப நல்லவர். இளகிய மனம் கொண்டவர். ஷூட்டிங்கில் ரொம்பவும் சீரியசாகவே இருப்பார். ஷூட்டிங் முடிந்த பிறகு காமெடியாகவும், ஜாலியாகவும் பேசி சிரிப்பார். விரைவில் சூர்யாவும், நானும் மீண்டும் ஒரு தமிழ்ப் படத்தில் சேர்ந்து நடிக்க இருக்கிறோம்.

The post அஜித் சமையலை இன்னும் சாப்பிடவில்லை: லைலா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ajit ,Laila ,Chennai ,Vijay ,Prashant ,Ajith ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இந்தியா – சீன உறவை மேம்படுத்த ஒப்புதல்