×

சிவகிரி கோயிலில் வருஷாபிஷேகம்

சிவகிரி: சிவகிரி மகுடாபிஷேக சண்முகவிநாயகர்  கோயிலில் வருஷாபிஷேகவிழா நடந்தது. வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு கோயிலில் யாகசாலை பூஜைகள் நடந்தது.தொடர்ந்து கோபுர கலசங்களில் புனித நீர் அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து  மகுடாபிஷேக சண்முக விநாயகருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை  நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுத்தலைவர் வேலுச்சாமி, செயலாளர் ரவி, பொருளாளர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags : Sivagiri ,
× RELATED வாசுதேவநல்லூர், சிவகிரியில் அரசு...