×

கிரைம் பிராஞ்ச் அதிகாரியாக தான்யா

சென்னை: தான்யா ரவிச்சந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, எஸ்.ஆர். பிரபாகரனின் ஸ்டோன் எலிஃபேண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘றெக்கை முளைத்தேன்’ படத்தை கடந்த வாரம் பார்த்த தணிக்கை குழுவினர், படத்தை இன்றைய இளைஞர்களுக்கான திரைப்படம் என பாராட்டி யூஏ சான்றிதழ் வழங்கினர். படம் பற்றி இயக்குனர் எஸ்ஆர். பிரபாகரன் கூறியது: இது நான் சொந்த நிறுவனம் துவங்கி தயாரிக்கும் முதல் திரைப்படம். எனது முதல் தயாரிப்பு என்பதால் நானே கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறேன்.

படம் முழுக்க முழுக்க கல்லூரி இளைஞர்களை மனதில் வைத்து உருவாக்கியுள்ளேன். படத்தின் மிக முக்கிய கதாபாத்திரத்தில் கிரைம் பிராஞ்ச் அதிகாரியாக தான்யா ரவிச்சந்திரனும் மற்ற முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன், கஜராஜ், ஜீவாரவி, மீரா கிருஷ்ணன், நடிக்க ஐந்து புதுமுகங்களை அறிமுகம் செய்கிறேன். பின்னணி இசையை தரண்குமார் அமைக்க பாடல்களுக்கு தீசன் இசையமைக்கிறார். கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவில், பிஜு டான் போஸ்கோ படதொகுப்பு செய்கிறார். கார்த்திக்துரை நிர்வாக தயாரிப்பு செய்கிறார். இணை தயாரிப்பாளராக ஏ.முனிஸ்வர், கே.தீரா உள்ளனர். படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகிறது.

The post கிரைம் பிராஞ்ச் அதிகாரியாக தான்யா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Tanya ,Chennai ,Tanya Ravichandran ,S.R. ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு எதிரான...