×

புதிய அவதாரத்தில் சிவராஜ் குமார்

பெங்களூரு: கன்னடத்தில் வெற்றிபெற்ற ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ மற்றும் அதன் 2வது பாகம் ‘சப்த சாகரதாச்சே எல்லோ-சைடு ஏ’ படங்களின் இயக்குனர் ஹேமந்த் ராவ் இயக்கத்தில் புதிய படத்தில் சிவராஜ் குமார் ஹீரோவாக நடிக்கிறார். வைஷாக் கவுடா தயாரிக்கிறார்.

இப்படத்தின் டைட்டில் லுக்கை படக்குழு வெளியிட்டது. இதுகுறித்து ஹேமந்த் ராவ் கூறுகையில், ‘நான் இயக்கிய ‘சப்த சாகரதாச்சே எல்லோ-சைடு ஏ’ படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் இந்த ஸ்கிரிப்ட்டை எழுதினேன். சிவண்ணா இந்த கான்செப்ட் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக சொன்னார். அவருக்காக படம் உருவாக்குவது என்பது மிகவும் கடினமானது. காரணம், அவர் 120 படங்களுக்கு மேல் நடித்துள்ள பிரபலமான நடிகர். இதுவரை அவர் ஏராளமான வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துவிட்டார் என்றாலும், தற்போது நான் இயக்கும் படம் அவரை புதியதொரு அவதாரத்தில் வெளிப்படுத்தும். பான் இந்தியா படமான இது அடுத்த ஆண்டு திரைக்கு வருகிறது’ என்றார்.

The post புதிய அவதாரத்தில் சிவராஜ் குமார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Shivraj Kumar ,Bengaluru ,Sivaraj Kumar ,Hemant Rao ,Vaishak Gowda ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தமிழ்நாடு ஹிஸ்புத் தஹ்ரீர் வழக்கில்...