×

பெரம்பூரில் பாரில் குடித்து விட்டு ரகளை வாலிபருக்கு சரமாரி அடி-உதை: போலீசார் விசாரணை

பெரம்பூர்: கொளத்தூரில் டாஸ்மார்க் கடையில் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டவருக்கு தர்ம அடி விழுந்தது. சென்னை கொளத்தூர் ஜிகேஎம் காலனி பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடையில் நேற்று இளைஞர்கள் சிலர் கூட்டமாக அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு தொந்தரவு தரும் வகையில் சத்தமாக பேசி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பார் ஊழியர்கள், ‘மெதுவாக பேசுங்கள், எதற்காக ரகளை செய்கிறீர்கள்’ என்று அந்த இளைஞர்களிடம் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த நபர்கள், பார் ஊழியர்களிடம் தகராறு செய்தனர்.வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. இதில் பார் ஊழியர்கள் தாக்கியதில், பெரியார் நகர் ஜிகேஎம் காலனி பகுதியை சேர்ந்த சதீஷ் (31) என்ற மேஸ்திரிக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தலையில் 5 தையல்கள் போடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

The post பெரம்பூரில் பாரில் குடித்து விட்டு ரகளை வாலிபருக்கு சரமாரி அடி-உதை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Perampur ,Perambur ,Tasmark ,Kolathur ,Kolathur GKM Colony ,Chennai ,Barra ,Dinakaran ,
× RELATED சென்னையில் நான்காவது சம்பவம்;...