×

பாலா இயக்கிய வணங்கான் அடுத்த மாதம் வெளியாகிறது

சென்னை: பாலா இயக்கத்தில் சூர்யா, கிரித்தி ஷெட்டி நடிப்பில் தொடங்கிய படம், ‘வணங்கான்’. சில நாட்கள் படப் பிடிப்பு நடந்திருந்த நிலையில், திடீரென்று பாலாவுக்கும், சூர்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி பேட்டி தராமல், ஒரு அறிக்கையின் மூலமாக சுமூகமாகப் பிரிந்துவிட்டனர்.

இதைத் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க அருண் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டார். சுரேஷ் காமாட்சி தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். முக்கிய வேடங்களில் ரோஷிணி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின், வரலட்சுமியின் தாயார் சாயாதேவி நடிக்கின்றனர். இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது என்று படக்குழு உறுதி செய்துள்ளது.

 

The post பாலா இயக்கிய வணங்கான் அடுத்த மாதம் வெளியாகிறது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vanagan ,Bala ,Suriya ,Kriti Shetty ,Surya ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பாலா படத்தில் நடிக்கிறது சும்மாவா...Prabhu Deva Mass Speech at Petta Rap Audio Launch | Vedhika