×

விசேஷ குழந்தைகளின் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லும் படம்

சென்னை: ‘டபுள் டக்கர்’ என்ற படத்துக்குப் பிறகு டாக்டர் தீரஜ் நடித்துள்ள படம், ‘பிள்ளையார் சுழி’. மனோகரன் பெரியதம்பி இயக்கியுள்ளார். சிலம்பரசி.வி தயாரிக்க, எயர் ஃப்ளிக்ஸ் இணை தயாரிப்பு செய்துள்ளது. அபிநயா, ரேவதி, மைம் கோபி, டாக்டர் சீனிவாசன், மேத்யூ வர்கீஸ் நடித்துள்ளனர். பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். நவீன், அருவி இசை அமைத்துள்ளனர். இப்படம் குறித்து தீரஜ் கூறியதாவது:

நியூயார்க், சிலோன் திரைப்பட விழாக்களில் விருதுகள் பெற்றுள்ள இ்ப்படத்தில், விசேஷ குழந்தைகளுக்கு நமது சமூகம் எந்தளவு ஆதரவு தருகிறது என்று சொல்கிறோம். விசேஷ பள்ளிக்கு சென்று, அவர்களின் வாழ்க்கை குறித்து கண்டறிந்தேன். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பேசுவதோடு, அதற்கு தீர்வையும் சொல்கிறோம். நிஜமான விசேஷ குழந்தை நடித்ததால், கூடுதலாக 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். விசேஷ குழந்தைகளைப் பாதுகாக்க மாநில அரசு அதிக கவனம் செலுத்துகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏராளமான வசதிகள் செய்து தரப்படுகிறது. நடிகை அபிநயாவுக்கு காது கேட்பதில் குறைபாடு இருந்தாலும், நடிக்கும்போது மிரட்டிவிடுகிறார். அழவேண்டிய காட்சிகளில் யதார்த்தமாக நடித்து அசத்தினார். மற்றவர்கள் பேசுவதை உதட்டசைவு மூலம் புரிந்துகொள்கிறார். பதில் பேச முடியாது என்பதால், செல்போனிலேயே கேள்விக்கான பதிலை டைப் செய்து காண்பிப் பார். அவ்வப்போது செய்கைகள் மூலமாகவும் பதிலளிப்பார்.

The post விசேஷ குழந்தைகளின் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லும் படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Dr. ,Dheeraj ,Manokaran Periyathambi ,Air Flix ,Silambarasv ,Abhinaya ,Revathi ,Maim Gobi ,Srinivasan ,Mathew Varghese ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED டாக்டர் காந்தராஜ் மீது வழக்குப் பதிவு