×

4வது கணவரை பிரிய முடியாமல் மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட்டின் முன்னணி நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபஸ், பிரபல நடிகர் பென் அப்லெக் ஆகியோர் நீண்டகாலமாக டேட்டிங் செய்து வந்த நிலையில், கடந்த 2022 ஆகஸ்ட் 20ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், திடீரென்று பென் அப்லெக்கிடம் இருந்து விவாகரத்து கோரி, லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி உயர் நீதிமன்றத்தில் ஜெனிபர் லோபஸ் மனு தாக்கல் செய்தார். அதில், தாங்கள் இருவரும் கடந்த ஏப்ரல் 26ம் தேதி முதல் பிரிந்து வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டார்.

இத்தகவல் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தி இருந்த நிலையில், பென் அப்லெக்கை விட்டுப் பிரிந்து செல்ல ஜெனிபர் லோபஸ் தயாராக இல்லை என்றும், இப்பிரிவை நினைத்து அவர் தினமும் மது அருந்துவதாகவும், அவரது நெருங்கிய நண்பர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். பென் அப்லெக்குடன் சேர்ந்து வாழ ஜெனிபர் லோபஸ் விரும்புவதாகவும், அதற்கு பென் அப்லெக் தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால், எப்போதாவது ஒருமுறை மது அருந்திய ஜெனிபர் லோபஸ், தற்போது தினமும் மது அருந்துகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 4வது கணவரைப் பிரிய முடியாமல் அவர் தவிப்பதை திரையுலகினர் வருத்தத்துடன் விவாதிக்கின்றனர். ‘பியர்ல் ஹார்பர்’, ‘ஆர்கோ’, ‘கான் கேர்ள்’ உள்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்தவர் பென் அப்லெக்.

கடந்த 2016ல் வெளியான ‘பேட்மேன் வெர்சஸ் சூப்பர் மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ்’ என்ற படத்தில் பேட்மேனாக நடித்து ரசிகர்களைக் கவர்ந் தார். ‘அனகொண்டா’ என்ற படத்தின் மூலம் சர்வதேச அளவில் பிரபலமானவர், ஜெனிபர் லோபஸ். கடந்த ஆண்டு அவரது நடிப்பில் வெளியான ‘தி மதர்’ என்ற படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

The post 4வது கணவரை பிரிய முடியாமல் மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Jennifer Lopez ,Los Angeles ,Hollywood ,Ben Apleck ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஹாலிவுட்டின் குரல் மன்னன் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் மரணம்