×

தாமிரபரணியில் பவுர்ணமி ஆரத்தி பூஜை : பக்தர்கள் பங்கேற்பு

நெல்லை: நெல்லை தாமிரபரணி ஆற்றில் பவுர்ணமி ஆரத்தி பூஜை நடந்தது. நெல்லை தாமிரபரணியில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மஹா புஷ்கர விழா கடந்த மாதம் 11ம்தேதி முதல் 23ம் தேதி வரை நடந்தது. பாபநாசம் தொடங்கி புன்னக்காயல் வரை ஒவ்வொரு தீர்த்தக்கட்டத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் நீராடினர். புஷ்கர விழா பலன்கள் ஒரு ஆண்டு வரை நீடிக்கும் என்பதால் விழாவை ஒட்டி ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி திருநாளில் தாமிரபரணிக்கு ஆரத்தி விழா எடுக்க புஷ்கர குழு முடிவு செய்திருந்தது.

பவுர்ணமி நாளான நேற்று நெல்லை கைலாசபுரம் தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் திரண்டு தாமிரபரணிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். தொடர்ந்து ஆரத்தி எடுத்து தாமிரபரணி தாயை போற்றி பாடல்கள் பாடினர். வாணவேடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டன.  தொடர்ந்து ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து செல்லப்பட்டு, கைலாசநாதர் கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.  சங்கர்நகர் ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளி முதல்வர் உஷாராமன், தாளாளர் நிர்மல் ராமரத்தினம் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags : Poornima Aarthi Puja ,
× RELATED மங்கலங்களை வாரி வழங்கும் சிவராத்திரி