×

அட்சய லக்ன பத்ததி முறையில் திருமணப் பொருத்தம்

பிள்ளைகளுக்கு திருமணம் செய்யும் பெற்றோர்களின் கவனத்திற்கு

திருமண பொருத்தம் பார்க்கும் போது, நீங்கள் தற்போதைய புகைப்படத்தை உபயோகிப்பீர்களா அல்லது உங்களுடைய சிறு வயது (குழந்தை) புகைப்படத்தை உபயோகிப்பீர்களா? தற்போதைய புகைப்படத்தை உபயோகிப்பீர்கள் என்றால், இந்தப் பதிவு உங்களுக்கானதுதான்.

ஆயிரம் காலத்துப் பயிர்

திருமண பொருத்தம் எதற்காக பார்க்க வேண்டும்? ஏன் திருமணத்தை ஆயிரங்காலத்து பயிர் என்று மூதாதையர்களால் குறிப்பிடப்பட்டது என்றால், இது இரு மனங்களுக்கு இடையே மட்டும் நடக்கும் நிகழ்வு அல்ல, இது வாழையடி வாழையாக வாழக்கூடிய ஒரு சந்ததியின் ஆரம்பம். அதற்கான நிகழ்வுதான் இந்த திருமணம்.

காலத்தே பயிர் செய்

அனைத்து ஜீவராசிக்கும், அதற்கான காலங்களில், அதற்கான இணைகளை இயல்பாகவே, பிற ஜீவ ராசியுடைய தலையீடு ஏதும் இல்லாமல், இன்ன பிற தடைகளும் ஏதும் இல்லாமல் தேடிக் கொள்கின்றன. ஆனால், ஆறு அறிவு படைத்த மனிதனை பொறுத்தவரை, திருமணம் என்பது குடும்ப வாழ்க்கை, குடும்பமாக வாழும் ஒரு மேம்பட்ட சமூகம் என்பதனால், இந்த உறவுக்கு இன விருத்தியை தாண்டிய ஒரு கட்டமைப்பு தேவைப்பட்டது. பரம்பரையின் உருவாக்கம் என்ற மிகப் பெரிய நோக்கத்தை கொண்டதனால், இந்த நிகழ்வை தீர ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆக, ஆண் பெண்ணின் இணைவு தாண்டி, நீண்ட கால உறவின் ஆரம்பமாக, ஒரு திருமணம் அமைந்தது. இந்த ஒப்பற்ற பொறுப்புணர்வு காரணமாக, இந்த திருமண நிகழ்வை ஒழுங்குப்படுத்தி சீரமைக்க நவீன ஜோதிட முறையான “அட்சய லக்ன பத்ததி ஜோதிடம்’’ என்ற காலக்கண்ணாடி கருவியாக
தேவைப்படுகிறது.

திருமணப் பொருத்தம் பார்க்கும் முன் கவனிக்க வேண்டியவை

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் திருமணப் பொருத்தம் பார்ப்பது என்பது ஆண் – பெண் இருவரது ஜாதகத்திலும் அவர்களது ALP லக்னப் பொருத்தம் இருக்க வேண்டும். அட்சய ராசி, தசா புத்தி பொருத்தம் இருக்க வேண்டும் என்பதை தாண்டி ஆண், பெண் இருவரது ஜாதக அமைப்புகளும், அவரவர் விதி,வினைப்பயன் மூலம் அவர்களுக்கு எப்படிப்பட்ட வரங்கள் அமையும் என்பதை ஜாதகருக்கும், பெற்றோர்களுக்கும் தெளிவுபடுத்தி திருமண பந்தத்தில் இணையும் முன், அவரவர் தன்மைக்கேற்ப அவர்களை தயார்படுத்தி, புரிய வைத்து, திருமணத் தடைகளுக்கான காரண காரியங்களை உணர வைத்து, தெளியவைப்பதே முதன்மையான நோக்கம்.

ஜாதகங்களில் என்ன அமைப்பு உள்ளதோ அதற்கு ஏற்றவாறு வரன்களை பாருங்கள். எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி, இப்படிப்பட்ட வரன்தான் அமைய வேண்டும் என காத்திருந்து ஒரு சில சின்னச் சின்னக் காரணங்களை காட்டி, நல்ல வரன்களை தட்டிக்கழித்து, காலங்கடந்து, பெரிய குறைகள் உள்ள வரன்களை, வேறு வழியில்லாமல் கட்டிக் கொண்டோம் என்று கூறக்கூடிய பெற்றோர்கள், ஜாதகர்களே இன்று அதிகம். அவ்வாறு நிகழாமல் உரிய திருமண காலத்தில் அவரவர் ஜாதக அமைப்புக்கு ஏற்றவாறு வரங்களை தேர்ந்தெடுத்தால் திருமணத் தடை, திருமண வாழ்க்கையில் பிரச்னை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகும். அதே போல், திருமண வயதில் உள்ளவர்களும் அவர்களுடைய பெற்றோர்கள் சந்திக்கும் சவால்களையும், வேதனைகளையும் களைந்து, அவர்களுக்கு ஒரு தெளிவை தந்து, தடை நீங்க பரிகாரமும் செய்து, நிவர்த்தி செய்து கொள்ளும் வழி வகைகளையும் ஏற்படுத்திக் கொடுத்து, உரிய நோக்கத்தோடு செயலாற்றி வருகிறது அட்சய லக்ன பத்ததி ஜோதிடம்.

 

The post அட்சய லக்ன பத்ததி முறையில் திருமணப் பொருத்தம் appeared first on Dinakaran.

Tags : Aksaya ,
× RELATED அள்ளித் தரும் அட்சய திருதியை