×

இந்தியன் 2 வருவதால் இந்தியன் ரீ ரிலீசாகிறது

சென்னை: கமல்ஹாசனின் இந்தியன் 2 ஜூலையில் திரைக்கு வருவதால் அதன் முதல் பாகமான இந்தியன் ரீ ரிலீசாகிறது. கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கவுண்டமணி, செந்தில், நெடுமுடி வேணு நடிப்பில் ஷங்கர் இயக்கிய படம் இந்தியன். இப்படத்தை ஏ.எம். ரத்னம் தயாரித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். 1996ம் ஆண்டு இப்படம் வெளியானது. 28 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் இந்தியன் 2 பெயரில் ஜூலை 12ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது.

இதில் கமல்ஹாசனுடன் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். லைக்கா புரொடக்‌ஷன்ஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஷங்கர் இயக்கியுள்ளார்.

இந்தியன் 2 வெளியாவதால் இந்தியன் படத்தை ஜூன் 7ம் தேதி தமிழ், தெலுங்கு மொழிகளில் ரீ ரிலீஸ் செய்வதாக முதல் பாகத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு கேஜிஎப் 2 வெளியாகும் சமயத்தில் கேஜிஎப் முதல் பாகம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இரண்டாம் பாகம் வெளியாகும்போது முதல் பாகத்தை வெளியிட்டால் ரசிகர்கள் அப்படங்களுடன் அதிகம் தங்களை இணைத்துக்கொள்வார்கள் என டிரேட் வட்டாரங்கள் நம்புகின்றன.

The post இந்தியன் 2 வருவதால் இந்தியன் ரீ ரிலீசாகிறது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,Kamal Haasan ,Shankar ,Manisha Koirala ,Urmila ,Goundamani ,Senthil ,Nedumudi Venu ,A.M. ,Ratnam.… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இந்தியன் 2 🔥🔥 Kamal Haasan Speech at Indian 2 Trailer Launch | Shankar | Anirudh | Dinakaran news.