×

தீரஜ் நடிக்கும் பிள்ளையார் சுழி

சென்னை: ‘போதை ஏறி புத்தி மாறி’, ‘டபுள் டக்கர்’ ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து தீரஜ் நடித்துள்ள படம், ‘பிள்ளையார் சுழி’. மனோகரன் பெரியதம்பி எழுதி இயக்கியுள்ளார். சிலம்பரசி.வி ஏர் பிளிக் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். மாற்றுத்திறனாளி குழந்தையின் வாழ்க்கையை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது.

தீரஜ், அபிநயா, ரேவதி, மைம் கோபி, மேத்யூ வர்கீஸ், டாக்டர் சீனிவாசன், தர்ஷன், ‘ஜீவா’ ரவி, பழனி தேவி, ஆர்ஜே மகாலட்சுமி ஆகியோ ருடன் குழந்தை நட்சத்திரங்கள் உன்னி கிருஷ்ணன், ஆர்னா, ஃபர்ஹானா, ஷரவண் நடித்துள்ளனர், பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹரி எஸ்.ஆர் இசை அமைத்துள்ளார். ரேஷ்மன் குமார், மோகன் ராஜன், கோதை தேவி பாடல்கள் எழுதியுள்ளனர். இப்படம் நியூயார்க் திரைப்பட விழாவில் இறுதிச்சுற்றில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

The post தீரஜ் நடிக்கும் பிள்ளையார் சுழி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Dheeraj ,Pilliyar Suzhi ,CHENNAI ,Manokaran Periyathambi ,Silambarasiv ,Airblick ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கட்டணம் கேட்டதால் ஆத்திரம் சுங்க...