×

தேவர் குருபூஜை விழாவில் முதுகுளத்தூரில் பால்குட ஊர்வலம்

சாயல்குடி: கடலாடியில் தேவர் குருபூஜை, 30ம் ஆண்டு முளைப்பாரி திருவிழா, ராஜராஜேஸ்வரி அம்மன் வருடாபிஷேகம் கடந்த 23ம் தேதி கொடியேற்றம் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. கணபதி ஹோமம் மற்றும் யாகச்சாலைகள் வளர்க்கப்பட்டு ராஜேஸ்வரி அம்மன், விநாயகர், முருகன், தேவர் சிலைகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. விழாவையொட்டி தினந்தோறும் பெண்கள் கும்மி அடித்தும், இளைஞர்கள் ஒயிலாட்டம், ஆடியும் உற்சாகமாக கொண்டாடினர். இதில் பெண்கள் பொங்கலிட்டும், மாவிளக்கு, பால்குடம் எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

மழை பெய்ய வேண்டி குத்துவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. இரவில் கிராமிய கலைநிகழ்ச்சி நடந்தது. கடைசி நாளான நேற்று முன்தினம் இரவு பாரி ஊர்வலம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முதுகுளத்தூர் ஆப்பனாடு மறவர் சங்கம் மற்றும் இளைஞர் சங்கம் சார்பில் 1008 பால்குடம் ஊர்வலம் நடந்தது. சுப்ரமணியர் கோயிலில் தொடங்கி முதுகுளத்தூரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து பேருந்து நிலையத்திலுள்ள தேவர் சிலைக்கு பால், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

Tags : Mudukulathur ,festival ,
× RELATED முதுகுளத்தூர்- அபிராமம் சாலை...