×

ரசவாதி படத்துக்கு யு/ஏ ஏன்?.. சாந்தகுமார் விளக்கம்

சென்னை: அருள்நிதி நடித்த ‘மௌன குரு’, ஆர்யா நடித்திருந்த ‘மகாமுனி’ ஆகிய படங்களை தொடர்ந்து சாந்தகுமார் எழுதி இயக்கியுள்ள படம், ‘ரசவாதி-தி அல்கெமிஸ்ட்’. இதில் கதையின் நாயகனாக அர்ஜூன் தாஸ், அவரது ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் ரம்யா சுப்பிரமணியன், சுஜாதா, ஜி.எம்.சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கட், ரிஷிகாந்த், அருள்ேஜாதி, தீபா நடித்துள்ளனர். டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி சார்பில் சாந்தகுமார், சரஸ்வதி சினி கிரியேஷன் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் வரும் 10ம் தேதி திரைக்கு வருகிறது. சரவணன் இளவரசு ஒளிப்பதிவு செய்ய, தமன் இசை அமைத்துள்ளார். யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார்.

இப்படம் குறித்து சாந்தகுமார் கூறுகையில், ‘சித்த மருத்துவர் அர்ஜூன் தாஸ் கொடைக்கானலில் அமைதியாக வாழ்ந்து வருகிறார். அப்போது அவரது கடந்த கால சம்பவங்கள் அவரை மிகவும் துன்புறுத்துகின்றன. அதற்கு அவர் என்ன தீர்வு கண்டார் என்பது படம். உறவுகளை மையப்படுத்திய கதையில், இருவிதமான தோற்றங்களில் அர்ஜூன் தாஸ் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். ரசவாதம் என்பது ஒரு உலோகத்தை மற்றொரு உலோகமாக மாற்றுவது. இந்தக் கதையில் அர்ஜூன் தாஸ் எதை மாற்றுகிறார் என்பதை நிறைய கதாபாத்திரங்களின் பின்னணியில் சொல்லியிருக்கிறேன்.

உலோகத்தை மனதாக காண்பிக்கிறேன். ரசவாதி என்ற நாவலுக்கும், இந்தப் படத்தின் கதைக்கும் சம்பந்தம் இல்லை. ரொமான்ஸ், ஆக்‌ஷன், கிரைம், திரில்லர் பின்னணியில் கதை நடக்கும். கொடைக்கானல், பழநி, மதுரை, கடலூர் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. கேரள முன்னாள் முதலமைச்சரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான இ.எம்.எஸ் பேரன் சுஜித் சங்கர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். படத்துக்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கி இருக்கின்றனர். கதையும், காட்சிகளும் அப்படி இருக்கும். சில வசனங்களுக்கு மட்டும் ‘கட்’ கொடுத்தனர்’ என்றார்.

The post ரசவாதி படத்துக்கு யு/ஏ ஏன்?.. சாந்தகுமார் விளக்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Shanthakumar ,Chennai ,Arul Nidhi ,Arya ,Arjun Das ,Tanya Ravichandran ,Ramya ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்