×
Saravana Stores

தெருக்கூத்து கலைஞனாக மாறிய கருணாஸ்

சென்னை: போகுமிடம் வெகு தூரமில்லை படத்தில் விமலுடன் இணைந்து கருணாஸ் நடித்திருக்கிறார். படம் குறித்து இயக்குனர் மைக்கேல் ராஜ் கூறியது: இது முழுநீள மனிதத்தை பேசும் சமூகப் படம். நெல்லையில் பெரும்புள்ளியாக இருக்கும் ஒருவர் ெசன்னையில் இறந்து போகிறார். அவரது உடலை எடுத்துக்கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் டிரைவராக விமல் நடித்துள்ளார். அப்போது வழியில் தெருக்கூத்து கலைஞனான கருணாஸ் லிப்ட் கேட்டு அமர்ந்து கொள்கிறார். தனது மனைவி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டதால் ஒருவித டென்ஷனுடன் விமல் பயணித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு நேர் எதிர்மாறான கேரக்டரான கருணாஸ், பயணம் முழுக்கவே பேசிக்கொண்டே வருகிறார். அதிலும் தன்னைத்தானே உயர்த்தி பேசிக்கொள்ளும் பழக்கம் உடையவர்.

இது எல்லாம் விமலுக்கு எரிச்சலை தருகிறது. இந்த பயணம்தான் படத்தின் முக்கிய அம்சம். இறந்துபோன பெரும்புள்ளிக்கு இரண்டு மனைவிகள். யார் வாரிசு என்பதில் அவர்களின் மகன்களுக்கு இடையே போட்டி ஏற்படுகிறது. இதையெல்லாம் வைத்து படம் ஒரு மனிதநேயத்தை பேசுகிறது. இதில் ஹீரோயினாக மேரி ரிக்கெட்ஸ் என்ற புதுமுகம் நடிக்கிறார். வேல.ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், ஆடுகளம் முருகதாஸ், தீபா சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். என்.ஆர்.ரகுநந்தன் இசை. டேமி சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு. ஷார்க் 9 பிக்சர்ஸ் சார்பில் சிவா கில்லாரி தயாரித்துள்ளார்.

The post தெருக்கூத்து கலைஞனாக மாறிய கருணாஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Karunas ,Chennai ,Vimal ,Michael Raj ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED போகுமிடம் வெகுதூரமில்லை ஓடிடியில் புது சாதனை