×
Saravana Stores

போகுமிடம் வெகுதூரமில்லை ஓடிடியில் புது சாதனை

சென்னை: அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில், 70 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்த ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ திரைப்படம், ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம் அமேசானில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் 4வது இடத்தையும் பிடித்திருக்கிறது. விமல், கருணாஸ் நடித்துள்ள படத்தை மைக்கேல் கே.ராஜா இயக்கினார்.

இந்த படம் தியேட்டர்களில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் ஓடிடியில் வெளியாகி சாதனை படைத்து வருகிறது. சமீபத்தில் படத்தை பார்த்த விஜய் சேதுபதி, இயக்குனர் மைக்கேல் ராஜா மற்றும் படக்குழுவை அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

Tags : CHENNAI ,Amazon ,Vimal ,Karunas ,
× RELATED காமெடி கதையில் விமல் யோகிபாபு