×

சினிமா மூலம் ஆன்லைன் விழிப்புணர்வு: இயக்குனர் ஜெயப்பிரகாஷ் தகவல்

சென்னை: போலியான ஆன்லைன் விளையாட்டுத் தளங்களை கண்டறிவதற்காகவும், ஆன்லைன் விளையாட்டுத் தளங்களை கட்டுப்படுத்துவதற்காகவும் பிரஹர் அமைப்பும், மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகடாமியும் இணைந்து சென்னையில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தியது. இந்த கருத்தரங்கத்தில் போலியான ஆன்லைன் தளங்களை பொதுமக்கள் எளிதாக கண்டறிதல், போலியான ஆன்லைன் தளங்களுக்கு எதிராக திரைப்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டது.

பிரஹர் அமைப்பு தலைவர் அபய் ராஜ் மிஸ்ரா, மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகடாமியின் இயக்குனரும் திரைப்பட இயக்குனருமான டாக்டர்.வி.ஜெயப்பிரகாஷ், பிரஹர் அமைப்பின் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் வி.மகேஷ்வரன் கலந்துகொண்டனர். போலியான ஆன்லைன் விளையாட்டுத் தளங்கள் மற்றும் இணையதளம் மூலம் நடைபெறும் குற்றங்களை கண்டறியும் இந்திய நிறுவனங்கள் இன்னும் கூடுதல் பலம் வாய்ந்தவைகளாக இருக்க வேண்டும். குறிப்பாக திரைப்படங்கள் மூலம் இதுபோன்ற சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அரசுக்கு வைக்கப்பட்டது. தனது படம் மூலமும் இந்த செய்தியை மக்களுக்கு சொல்வேன் என இயக்குனர் ஜெயப்பிரகாஷ் கூறினார்.

Tags : Jayaprakash ,CHENNAI ,Prahar Organization ,Madras Digital Cinema Academy ,
× RELATED மாணவர்களை மசாஜ் செய்ய வைத்த ஆசிரியர் சஸ்பெண்ட்