×

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ்

சென்னை: ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கிறார். சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த ‘அமரன்’ படத்தை இயக்கியவர் ராஜ்குமார் பெரியசாமி. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் அடுத்ததாக எந்த படத்தை இயக்குவார் என கேள்வி எழுந்தது. இந்நிலையில் தனுஷ் படத்தை அவர் இயக்குவது உறுதியாகியுள்ளது. இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புச்செழியன் தயாரிக்கிறார்.

தற்போதைக்கு டி55 அதாவது தனுஷின் 55வது படம் என தற்காலிக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் பணியாற்றும் ஹீரோயின், மற்ற நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்களுக்கான ேதர்வு நடைபெற்று வருகிறது. துவக்க விழாவில் தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி, வெற்றிமாறன், அன்புச்செழியன், சுஷ்மா அன்புச்செழியன் உள்பட பலர் பங்கேற்றனர். ஆக்‌ஷன், காதல் உள்ளிட்ட அம்சங்களுடன் பொழுதுபோக்கு சித்திரமாக இப்படம் உருவாக உள்ளது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கும். அடுத்த ஆண்டு படம் வெளியாகும் என பட வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : Dhanush ,Rajkumar Periasamy ,Chennai ,Rajkumar Periyasamy ,Sivakarthikeyan ,Sai Pallavi ,
× RELATED தனுஷ், ஏ.ஆர்.ரஹ்மான், ஜெயம் ரவி...