×

கமுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் மகர்நோன்பு திருவிழா

கமுதி: கமுதி க்ஷத்திரிய நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோயிலில் மகர்நோன்பு திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.  
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி முருகன் கோயிலில் இருந்து  வெள்ளிக் குதிரை வாகனத்தில் புறப்பட்டு ஊர்வலமாக மகர்நோன்பு திடலை வந்தடைந்தார். பின்னர் அங்கு நடந்த அம்பு விடும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் வானவேடிக்கை, மேளதாளம், சிலம்பாட்டம் ஆகியவற்றுடன் சுவாமி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்து கோவிலை சென்றடைந்தது.  இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் க்ஷத்திரிய நாடார் உறவின்முறையினர் செய்திருந்தனர்.

Tags : Maharnobhan ,festival ,Muthumariyamman ,
× RELATED நாசுவம்பாளையத்தில் அண்ணன்மார் சாமி கோவில் திருவிழா