×

வெளிநாட்டு மாடல் கையில் திஷா பதானியின் டாட்டூ

மும்பை: பாலிவுட் நடிகை திஷா பதானி தனது சமூக வலைத்தளங்களில் கிளாமர் வீடியோ மற்றும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். பல மொழிகளிலும் நடிக்கிறார். ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல் நடிக்க, 38 மொழிகளில் 3டியில் உருவாக்கப்பட்டு வரும் ‘கங்குவா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் திஷா பதானி, பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் மகனும், நடிகருமான டைகர் ஷெராஃப்பை தீவிரமாக காதலித்தார். கருத்து வேறுபாடு காரணமாக தற்போது அவர்கள் பிரிந்துவிட்டனர்.

இ்ந்த நிலையில், வெளிநாட்டு மாடல் அலெக்சாண்டர் என்பவரை டேட்டிங் செய்து வருகிறார், திஷா பதானி. சமீபத்தில் தனது தோழி மற்றும் அலெக்சாண்டருடன் அவர் வெளியே சென்ற வீடியோ வெளியானது. அப்போது அலெக்சாண்டரின் கையிலிருந்த டாட்டூ ரசிகர்களுடைய கவனத்தை ஈர்த்தது. அதைப் பார்த்த நெட்டிசன்கள், ‘இது திஷா பதானியின் டாட்டூவா?’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது திஷா பதானியும், அலெக்சாண்டரும் காதலித்து வருவதை அவர்களின் பதிவு உறுதி செய்துள்ளது.

 

The post வெளிநாட்டு மாடல் கையில் திஷா பதானியின் டாட்டூ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Disha Patani ,Mumbai ,Bollywood ,Suriya ,Bobby Deol ,Siva ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சினிமாவா எடுக்குறாங்க பாலிவுட்காரங்க?: கங்கனா கடும் விமர்சனம்