×

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கு: 8 பேரை கைது செய்து சிறப்பு புலனாய்வு குழு நடவடிக்கை

பஞ்சாப்: பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 8 பேரை கைது செய்து சிறப்பு புலனாய்வு குழு நடவடிக்கை எடுத்துள்ளது. பஞ்சாப் பாடகரும் காங்கிரஸ் பிரமுகரான சித்து மூஸ்வாலா (28 வயது) கடந்த வாரம் பஞ்சாபின் மான்சா கிராமத்தில் லாரன்ஸ் பீஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் சந்தேகத்தின் பெயரில் சிலர் போலீசார் சிலரை கைது செய்து விசாரணை நடத்திவந்த நிலையில், சித்துவின் தந்தை சிபிஐ, தேசிய புலனாய்வு முகமை, உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க கோரிக்கை வைத்தார். அதனை ஏற்ற பஞ்சாப் அரசு, உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், தற்போது கொலை வழக்கு தொடர்பாக 8 பேரை கைது செய்து சிறப்புப் புலனாய்வுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.சந்தீப் சிங், தல்வாண்டி, மன்பிரீத் சிங், சராஜ் மின்டு, பிரப்தீப் சித்து, மோனு தாகர், பவன் பிஷ்னோய், நசீப் ஆகியோரை சிறப்புப் புலனாய்வுக் குழு  கைது செய்துள்ளது. இவர்களிடம் நடத்தப்படும் விசாரணையின் முடிவில் தான் பாடகர் சித்து மூஸ்வாலா எதற்கு கொல்லப்பட்டார் என்று தெரியவரும்….

The post பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கு: 8 பேரை கைது செய்து சிறப்பு புலனாய்வு குழு நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Sidhu Mooswala ,Punjab ,Special Investigation Committee ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் ஜாமினை ரத்து செய்யக் கோரி மனு..!!