×

145 புராதன கோயில்களை தொன்மை மாறாமல் புனரமைக்க மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டம் நாளை நடக்கிறது: அறநிலையத்துறை உயர் அதிகாரி தகவல்

சென்னை: புராதனமான 145 கோயில்களை தொன்மை மாறாமல் புனரமைக்க  மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டம் நாளை நடக்கிறது. நூற்றாண்டு கடந்த கோயில்களைபழமை மாறாமல் புனரமைக்கும் வகையில் மாநில, மண்டல அளவிலான வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு சார்பில் திருப்பணி குறித்து பரிசீலனை செய்து ஒப்புதல் அளித்து வருகிறது. இந்த குழு பரிந்துரை செய்தால் மட்டுமே அந்த கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது, புராதன கோயில்களை தொன்மை மாறாமல் புனரமைக்கும் வகையில் மாநில அளவிலான வல்லுநர் குழுவின் 28வது வல்லுநர் குழு கூட்டம் நாளை நடக்கிறது. இக்கூட்டத்தில், 145 கோயில்கள் திட்டமதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. இதில், சென்னை வேளச்சேரி யோகநரசிம்மசுவாமி கோயில், சென்னை மயிலாப்பூர் வேதாந்த தேசிகர் தேவஸ்தானம், ராயப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோயில், ஆழ்வார் திருநகர் கிருஷ்ணர் கோயில், வளசரவாக்கம் செல்லியம்மன் கோயில், அகத்தீஸ்வரர் கோயில், ஆலந்தூர் ஆர்டிலரி தர்மராஜா கோயில், கீழ்ப்பாக்கம் செல்வ விநாயகர் கோயில், ஹாரிங்டன் வேம்புலி அம்மன் கோலாத்தம்மன் கோயில், திருமுல்லைவாயல் மாசிலாமணீஸ்வரர் கோயில், சென்னை சிவா விஷ்ணு கோயில், கோமளீஸ்வரர்பேட்டை தர்மராஜா கோயில், வால்டாக்ஸ் சாலை கற்பக சுந்தர விநாயகர் கோயில், என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சிந்தாதிரி விநாயகர் கோயில், சென்னை நிமிஷாம்பாள் கோயில், தங்கசாலை சித்திபுத்தி கற்பக விநாயகர் கோயில், புதுத்தெரு அங்காள பரமேஸ்வரி கோயில், வெள்ளை விநாயகர் கோயில், சட்டண்ணன் தெரு தர்மராஜா கோயில், சூளை வேம்புலியம்மன் கோயில், ஓட்டேரி ஆஞ்சநேயர் கோயில், ஸ்டாரன்ஸ் ரோடு எல்லம்மன் கோயில், குயப்பேட்டை செல்வ விநாயகர் கோயில் உள்பட 145 கோயில்களின் புனரமைப்பு பணிக்காக மதிப்பீட்டினை பரிசீலித்தல் மற்றும் ஒப்புதலுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்….

The post 145 புராதன கோயில்களை தொன்மை மாறாமல் புனரமைக்க மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டம் நாளை நடக்கிறது: அறநிலையத்துறை உயர் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : level expert committee ,CHENNAI ,expert ,Dinakaran ,
× RELATED பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில்...