×

நடப்பு நிதியாண்டை விட 6 சதவீதம் அதிகம் சோத்துக்கே சிங்கி அடிக்கும் பாக்.: ராணுவத்துக்கு கூடுதல் நிதி

இஸ்லாமாபாத்: பொருளாதாரம் சீரழிந்து, விலைவாசிகள் உயர்வால் மக்கள் திண்டாடி வரும் நிலையில், பாகிஸ்தான் தனது நாட்டு ராணுவத்துக்கு ₹1.4 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது, நடப்பு நிதியாண்டை விட 6% கூடுதலாகும்.பாகிஸ்தானின் நிதி மற்றும் பொருளாதார நிலையும் ஏறக்குறைய இலங்கையை போன்ற நிலையில்தான் திவாலாகி கிடக்கிறது. டாலருக்கு எதிரான பாகிஸ்தானின் பண மதிப்பு ₹200ஐ கடந்துள்ளது. பணவீக்கம் அதிகரித்து விலைவாசி விண்ணை முட்டிக் கொண்டிருக்கிறது. இதனால், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரிபொருள் வாங்குவதற்குக் கூட அரசு பணம் இல்லாமல் தவிக்கிறது. எரிபொருள் இல்லாமல் பல மின்உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. வருவாய் இல்லாததால் மின் கட்டணம், பெட்ரோல் டீசல் விலையை அரசு தாறுமாறாக உயர்த்தி வருகிறது. சீனா, ஐஎம்எப் மற்றும் உலக வங்கிகளிடம் கடன் வாங்கி நிலைமையைச் சரி செய்யும் நிலை நீடிக்கிறது.  இந்நிலையில், தனது ராணுவத்தை பலப்படுத்துவதற்காக அடுத்த நிதியாண்டுக்கு (2022-2023) ரூ.1.40 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இது நடப்பு நிதியாண்டை விட 6 சதவீதம் அதிகமாகும். கடந்தாண்டு ராணுவ பட்ஜெட்டிற்கு ஒதுக்கப்பட்ட தொகை ₹1.37 லட்சம் கோடியாகும். இந்த நிதி ஒதுக்கீட்டில் பெரும் பகுதியை ராணுவ அதிகாரிகளின் சம்பளம், போக்குவரத்து, பயிற்சி, ரேஷன் போன்றவற்றுக்கும், குறிப்பிட்ட தொகையை ஆயுதங்கள் கொள்முதல் மற்றும் இறக்குமதிக்கு பயன்படுத்தவும் செலவிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வளவு நிதி, கடன்  நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பாகிஸ்தான் ராணுவ பலத்தை அதிகரிப்பது உலக  நாடுகளின் புருவங்களை உயர்த்த வைத்துள்ளது.பாகிஸ்தான் அரசு தனது ராணுவ வீரர் ஒருவருக்கு ஆண்டுக்கு ₹26.5 லட்சம் வரை செலவிடுகிறது. ஆனாலும் இது இந்திய அரசு செலவிடுவதில் 3ல் ஒரு பங்குதான்….

The post நடப்பு நிதியாண்டை விட 6 சதவீதம் அதிகம் சோத்துக்கே சிங்கி அடிக்கும் பாக்.: ராணுவத்துக்கு கூடுதல் நிதி appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Islamabad ,
× RELATED பாக். தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக...