×

சூது கவ்வும் 2வில் சிவா நடிப்பது ஏன்? சி.வி.குமார் பதில்

சென்னை: கடந்த 2013ல் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, அசோக் செல்வன், கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி நடித்து ஹிட்டான படம், ‘சூது கவ்வும்’. தற்போது இப்படத்தின் 2ம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை தயாரித்த சி.வி.குமார் 2வது பாகத்தையும் தயாரித்துள்ளார். மிர்ச்சி சிவா, ஹரீஷா, வாகை சந்திரசேகர், எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ் நடித்துள்ள இப்படம், வரும் மே மாதம் திரைக்கு வருகிறது. இதுகுறித்து சி.வி.குமார் கூறியதாவது:

‘சூது கவ்வும்’ முதல் பாகத்தில் கருணாகரன் அமைச்சராகி இருப்பார். முதல் பாகத்துக்கும், 2வது பாகத்துக்கும் அவர் மட்டுமே தொடர்பு. முதல் பாகத்தில் விஜய் சேதுபதியால் ஏற்பட்ட ஒரு பிரச்னை, 2வது பாகத்தில் மிர்ச்சி சிவாவுக்கு மிகப்பெரிய சிக்கலாக வந்து சேரும். அதிலிருந்து மீண்டு வருவதற்காக அவர் என்ன செய்கிறார் என்பது மீதி கதை. இந்த கதைக்கு சிவா பொருத்தமாக இருந்ததால் அவரை தேர்வு செய்தோம். 1987, 2008 ஆகிய காலக்கட்டங்களில் நடந்து, பிறகு இன்றைய காலக்கட்டத்துக்கு கதை மாறும்.

நலன் குமாரசாமிக்குப் பதிலாக அர்ஜூன் எம்.எஸ் இயக்கியுள்ளார். இவர் பிரபுதேவா, லட்சுமி மேனன் நடிப்பில் ‘யங் மங் சங்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’, ‘மார்க் ஆண்டனி’ ஆகிய படங்களின் ஸ்கிரிப்ட்டில் அவரது பெரும் பங்களிப்பு இருந்தது. ஹீரோயின் ஹரீஷா, எம்.ஜி.ஆர் படங்களில் நடித்திருக்கும் ஜஸ்டினுடைய பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. ‘சூது கவ்வும்’ 3வது பாகமாக ‘தர்மம் வெல்லும்’ படம் உருவாகிறது. இதில் விஜய் சேதுபதியை நடிக்க கேட்டிருக்கிறேன். ஸ்கிரிப்ட் முழுவதையும் முடித்துவிட்டு அவரை வந்து பார்க்க சொல்லியிருக்கிறார்.

The post சூது கவ்வும் 2வில் சிவா நடிப்பது ஏன்? சி.வி.குமார் பதில் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CV ,Kumar ,Chennai ,Nalan Kumaraswamy ,Vijay Sethupathi ,Ashok Selvan ,Karunakaran ,Sanjitha Shetty ,CV Kumar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சூடுபிடிக்கும் விக்கிரவாண்டி...