×

உ.பி. காஸியாபாத்தில் உள்ள கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசம்

லக்னோ: உத்திரபிரதேசம் மாநிலத்தில் பழைய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கு ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காஸியாபாத் மாவட்டத்தில் உள்ள ஷாகித் நகரில் ஏராளமான பழைய ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கிடங்குகள் உள்ளன. இங்கு அதிகாலை அங்குள்ள கிடங்கு ஒன்றில் திடீரென தீ பற்றியது. காற்று பலமாக வீசியதால் தீ மற்ற இடங்களுக்கும் தீவிரமாக பரவியது. தகவல் அறிந்து 12 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் நெருப்பை அணைக்க போராடினர். சுமார் 2 மணிநேரம் போராடிய காஸியாபாத் தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதிகாலை நேரத்தில் கிடங்கில் பணியாளர்கள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.  …

The post உ.பி. காஸியாபாத்தில் உள்ள கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசம் appeared first on Dinakaran.

Tags : U. GP ,Ghaziabat ,Lucknow ,Uttar Pradesh ,Gaziabad District ,Ghaziabad ,
× RELATED உ.பியில் சுங்கச்சாவடியில் கட்டணம்...