- மக்களவைத் தேர்தல்
- ஹைதெராபாத்
- நாக் அஸ்வின்
- கமல்ஹாசன்
- பிரபாஸ்
- தீபிகா படுகோன்
- அமிதாப் பச்சன்
- திஷா படானி
- மக்களவை
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
ஐதராபாத்: நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி ஆகியோருடன் கமல்ஹாசன் நடிக்கும் படம் ‘கல்கி 2898 எடி’. இப்படம் மே மாதம் 9ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. ஆனால், அத்தேதியில் படம் வெளிவருவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுட்டுள்ளது.
தெலங்கானா, ஆந்திர மாநிலங்களில் மக்களவை தேர்தல் மே 13ம் தேதியன்றும், ஆந்திர சட்டசபை தேர்தலும் அதே தேதியில் நடக்கும் என்றும் அறிவித்துள்ளார்கள். மே மாதம் முழுக்க ஆந்திரா, தெலங்கானாவில் தேர்தல் பிரசாரம், பணிகள் மும்முரமாக இருக்கும். இந்த சமயத்தில் படத்தை வெளியிட்டால், வசூல் பாதிக்கலாம் என சொல்லப்படுகிறது.
தெலுங்கு மொழி பேசும் தெலங்கானா, ஆந்திர மாநிலங்களில்தான் ‘கல்கி 2898 எடி’ படத்திற்கான வசூல் மிக அதிகமாக இருக்கும். காரணம், இது பிரபாஸ் படம். அதனால் தேர்தல் சமயத்தில் படத்தை வெளியிட வேண்டாம் என விநியோகஸ்தர்கள் சிலர் கூறி வருகிறார்களாம். இதையடுத்து என்ன செய்வது என தெரியாமல் தயாரிப்பு தரப்பு குழப்பத்தில் இருக்கிறதாம்.
The post மக்களவை தேர்தலால் பிரபாஸ் படத்துக்கு சிக்கல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.