×

கோயில்களில் உள்ள உலோகத் திருமேனிகள், கற்சிற்பங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மையம் : அமைச்சர் சேகர்பாபு

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை, திருவொற்றியூர், காலடிப்பேட்டை, அருள்மிகு கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் இன்று (31.05.2022) திருக்கோயில் திருப்பணிகள் குறித்து மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார் .  இந்த ஆய்வுக்கு பின்பு அமைச்சர் கூறியதாவது, 450 ஆண்டுகள் பழமையான அருள்மிகு கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் 2003 ஆம் ஆண்டு திருப்பணி முடிவுற்று குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. அதன்பிறகு குடமுழுக்கு நடைபெறவில்லை, தற்போது ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி, இராமர் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, ஐந்து நிலை இராஜகோபுரம் உள்ளிட்ட திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 13.12.2021 அன்று பாலாலயம் நடைபெற்றது. நீண்ட ஆண்டுகளாக நடைபெற்று வரும் திருப்பணிகளை விரைந்து முடித்து குடமுழுக்கு நடத்தவும், சேதமடைந்தள்ள திருக்குள படித்துரையை சீரமைக்கவும்,    திருக்கோயில் சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டு, மீண்டும் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெற நடவடிக்கை எடுக்கப்படும். திருக்கோயில் நிலத்தில் உள்ள வாடகைதாரர்கள் குறைந்த வாடகை தொகையை செலுத்தி வருகின்றன. அவர்களுக்கு தற்போது உள்ள சந்தை மதிப்புக்கு ஏற்றவாறு வாடகை தொகை உயர்வு செய்யப்படும். திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிட ஆகியவை செய்து தரவும், வாகன காப்பகத்தை முற்றிலும் நீக்கிவிட்டு புதிதாக கட்டவும், இப்பணிகள் அனைத்தும் முடிவுற்று ஆகஸ்ட் மாதம் குடமுழுக்கு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யவும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.மேலும், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 500 மற்றும் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. 1000 ஆண்டுகள் கடந்த 80 திருக்கோயில்கள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் பழமை மாறாமல் புனரமைப்பு செய்யப்படும். தமிழ்நாடு முழுவதும் 38 வட்டாட்சியர்கள் மற்றும் நில அளவையாளர்களை கொண்டு திருக்கோயில் நிலங்கள் கணக்கீடப்பட்டு எல்லைகற்கள் நடப்பட்டு, கம்பிவேலி அமைக்கப்பட்டு வருகின்றன.     திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படவுள்ளது. இத்திருக்கோயிலில் திருப்பதிக்கு இணையாக Que Complex 500 நபர்கள் அமரும் வகையில் அமைக்கப்படவுள்ளது.      முக்கிய திருக்கோயில்கலான இராமேசுவரம், சமயபுரம், பழநி, பெரியபாளையம் போன்ற திருக்கோயில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது தமிழ்நாட்டில் திருக்கோயில்களில் உள்ள காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. தேவைக்கேற்ப புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். திருக்கோயில்களில் உள்ள உலோகத் திருமேனிகள் மற்றும் கற்சிற்பங்களின் பாதுகாப்பு உறுதி செய்ய பாதுகாப்பு மையம் மற்றும் அதற்கான காவலர்களும் நியமிக்கப்பட்டு வருகின்றனர் என அமைச்சர் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் (பொறுப்பு) திரு.இரா.கண்ணன், இ.ஆ.ப சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் திரு. எஸ்.சுதர்சனம், திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.பி.சங்கர், இணை ஆணையர் ந.தனபால், திருக்கோயில் செயல் அலுவலர் திரு.கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்துக் கொண்டனர். …

The post கோயில்களில் உள்ள உலோகத் திருமேனிகள், கற்சிற்பங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மையம் : அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekharbabu ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,Mr. ,M.K.Stalin ,Arulmiku Kalyana ,Varadaraja Perumal Temple ,Thiruvottiyur ,Kalatippet, Chennai ,
× RELATED வறட்சியிலும் ஆவின் பால் கொள்முதல் 31...