×

விஜய் மகன் இயக்கத்தில் துல்கர் சல்மான்

 

சென்னை: விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்க உள்ளார். விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், கனடாவில் டைரக்‌ஷன் கோர்ஸ் படித்திருக்கிறார். சில ஆங்கில குறும்படங்களை இயக்கி வந்தார். இந்நிலையில் அவர் எழுதி இயக்கும் முதல் தமிழ் படம் குறித்த அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியானது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் இதில் விஜய் சேதுபதி நடிக்கலாம் என கூறப்பட்டது. இப்போது இதில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிப்பது உறுதியாகியுள்ளது. ஆக்‌ஷன், லவ் கலந்த படமாக இது உருவாகிறது. இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். ஹீரோயினுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. படம் தொடர்பான மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

The post விஜய் மகன் இயக்கத்தில் துல்கர் சல்மான் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vijay Magan ,Dulquer Salmaan ,Chennai ,Vijay ,Jason Sanjay ,Canada ,Vijay Makan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...