×

பள்ளி பருவ காதலை சொல்லும் பூமர காத்து

 

சென்னை: மாணவர்களுக்கு மட்டும் இன்றி பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு திரைப்படமாக உருவாகியுள்ளது ‘பூமர காத்து’ என்றார் இயக்குனர் ஞான ஆரோக்கிய ராஜா.ஜீசஸ் கிரேஸ் சினி என்டர்டெயின்மென்ட் சார்பில், ஞான ஆரோக்கிய ராஜா தயாரித்து இயக்கியுள்ள இப்படத்தில் சந்தோஷ் சரவணன், விதுஷ் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகியாக மனிஷா நடித்திருக்கிறார். இவர்களுடன் மனோபாலா, சிங்கம் புலி, தேவதர்ஷினி, முத்துக்காளை, போண்டாமணி, சிஸ்ஸர் மனோகர், குழந்தை நட்சத்திரம் ஜி.வி.சன்மதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பள்ளி பருவத்தில் வரும் காதல் சரியா? தவறா? என்பதை மையமாக கொண்டு எழுதப்பட்டுள்ள இப்படத்தின் கதையில், காதலோடு பல்வேறு சமூக கருத்துகளும் பேசப்பட்டுள்ளது.

The post பள்ளி பருவ காதலை சொல்லும் பூமர காத்து appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Gnana Arogya Raja ,Jesus Grace Cine Entertainment ,Santhosh Saravanan ,Vidush ,Kollywood Images ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...