×

மலையாளத்தில் அறிமுகமாகிறார் அர்ஜுன் தாஸ்

 

சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கில் வில்லனாகவும், கதையின் நாயகனாகவும் நடித்து வரும் அர்ஜுன் தாஸ், அகமது கபீர் இயக்கும் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார். ஏற்கனவே அகமது கபீர் இயக்கிய ‘ஜூன்’, ‘மதுரம்’ மற்றும் ‘கேரளா கிரைம் பைல்ஸ்’ வெப் சீரிஸ் என்று, அனைத்துப் படைப்புகளும் வெற்றிபெற்ற நிலையில், தற்போது அர்ஜுன் தாஸுடன் அவர் அமைத்துள்ள கூட்டணி, ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘ஹிருதயம்’, ‘குஷி’, ‘ஹாய் நானா’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ஹேஷாம் அப்துல் வஹாப் இசை அமைக்கிறார். காதலை மையப்படுத்தி படம் உருவாகிறது. நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.

 

The post மலையாளத்தில் அறிமுகமாகிறார் அர்ஜுன் தாஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Arjun Das ,CHENNAI ,Ahmed Kabir ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...