×

பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து குறைந்தது

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் நேற்றும் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்பட்டது. அதிகபட்சமாக சுருளோட்டில் 21.4 மி.மீ மழை பெய்திருந்தது. பூதப்பாண்டி 8.2, களியல் 18.6, குழித்துறை 5.4, சிற்றார்-2ல் 8, திற்பரப்பு 18.6, முள்ளங்கினாவிளை 8.2 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது. மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.99 அடியாகும். அணைக்கு 628 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 644 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ள நிலையில் வருகின்ற தண்ணீர் அப்படியே மறுகால் மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 53.75 அடியாகும். அணைக்கு 326 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. அணை மூடப்பட்டிருந்தது.  சிற்றார்-1ல் 11.94 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. 30 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார்-2ல் 12.04 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. அணைக்கு 45 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. பொய்கையில் 17.80 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 24.85 அடியாகும். முக்கடல் அணை நீர்மட்டம் 8.10 அடியாக உள்ளது. அணைக்கு 11.5 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 8.6 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது….

The post பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Pachiparai dam ,Nagercoil ,Kumari district ,
× RELATED பேச்சிப்பாறையில் படகில் பயணித்து வாக்களித்த மலைவாழ் மக்கள்