×

இயக்குனர் மீது நடிகை மால்வி புகார்

சென்னை: இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் மால்வி மல்ஹோத்ரா. பல இசை ஆல்பங்களில் நடித்துள்ள இவர் தமிழில் ஆர்.கே. ஜோடியாக இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இவர், இசை ஆல்பத்தில் நடித்ததற்கு பிரபல பாலிவுட் இயக்குனரும் தயாரிப்பாளருமான விக்ரம் பட், சம்பளம் தராமல் ஏமாற்றிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ‘விக்ரம் பட் தயாரித்த இசை ஆல்பத்தில் நான் பணியாற்றினேன். நான் பிசியாக இருந்தபோதும் விக்ரம் பட் தயாரிப்பு என்பதால் உடனடியாக ஒப்புக்கொண்டு நடித்தேன். அவர் மகள் கிருஷ்ணா பட் இயக்கினார். நான் அவர்களை முழுமையாக நம்பினேன். ஆனால், பண விஷயத்தில் என்னை ஏமாற்றிவிட்டார்கள். சம்பளம் பற்றி கேட்டபோது எந்த பதிலும் வரவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு விக்ரம் பட் என்னை வேறொரு படத்தில் நடிக்க அழைத்தார். நான் ஒப்புக்கொள்ளவில்லை. வேறு யாரும் ஏமாந்துவிடக் கூடாது என்பதால் இதைச் சொல்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

The post இயக்குனர் மீது நடிகை மால்வி புகார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Malvi ,Chennai ,Malvi Malhotra ,R.K. ,Bollywood ,Vikram ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...