×

ரோமியோவுக்கு எடிட்டிங் செய்யும் விஜய் ஆண்டனி

சென்னை: விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாக இருக்கும் ‘ரோமியோ’ படத்துக்கு அவரே எடிட்டிங் செய்கிறார். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் ‘ரோமியோ’ படம் கோடை விடுமுறையில் ரிலீசாக உள்ளது. விநாயக் வைத்தியநாதன் இயக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக மிருணாளினி ரவி நடிக்கிறார். யோகி பாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்தின் இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் தனது யூடியூப் சீரிஸ் ‘காதல் டிஸ்ஷன்சிங்’ மற்றும் ‘ஐ ஹேட் யூ, ஐ லவ் யூ’-ன் மூன்றாவது எபிசோட் ஆகியவற்றிற்காக புகழ் பெற்றவர். ‘ரோமியோ’, தெலுங்கில் “லவ் குரு” என்ற பெயரில் வெளியாக உள்ளது. ரெட் ஜெயன்ட் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது. ‘பத்துதல’ படத்தில் பணியாற்றிய ஃபரூக் ஜே. பாஷா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பரத் தனசேகர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அண்ணாதுரை படத்துக்கு பிறகு இந்த படத்துக்கும் விஜய் ஆண்டனியே எடிட்டிங் செய்துள்ளார்.

The post ரோமியோவுக்கு எடிட்டிங் செய்யும் விஜய் ஆண்டனி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vijay Antony ,CHENNAI ,Vijay Antony Film Corporation ,Meera Vijay Antony ,Vinayak Vaidyanathan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சீனியர்களுடன் நடிக்கும்போது பதற்றமாக...