×

காதல் கதையில் தர்ஷன், தர்ஷனா

சென்னை: சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்.வினோத் குமார் வழங்க, ‘சேத்துமான்’ தமிழ் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் ‘கனா’ தர்ஷன், ‘ஹிருதயம்’ தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. பெருமாள் முருகன் கதை, வசனம் எழுதியுள்ள இதில், உண்மையான காதல் எது? அதிலுள்ள அரசியல் என்ன என்பது குறித்து பேசப்பட்டுள்ளது. படம் குறித்து தமிழ் கூறுகையில், ‘நம் நாட்டில் எங்கும் அரசியல், எதிலும் அரசியல். அதிகார அரசியல் மட்டுமின்றி, சாமானிய அரசியல் கூட சமூகத்தில் வேரூன்றியுள்ளது. இரு இதயங்கள் இணையும் காதலில், அரசியல் செய்யும் மாற்றங்களை சித்தரிக்கும் படம் இது’ என்றார். தீபக் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிந்துமாலினி, வேதாந்த் பரத்வாஜ் இசை அமைத்துள்ளனர். முக்கிய வேடங்களில் ஆதிரா, ஆதித்யா கதிர் நடித்துள்ளனர். மைசூரு, பெங்களூரு, மாதேஸ்வரன் மலை, தருமபுரி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

The post காதல் கதையில் தர்ஷன், தர்ஷனா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,S.Vinoth Kumar ,Cinemakaran ,Kana' Darshan ,Darshana Rajendran ,Perumal Murugan ,Darshan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...