×

ஆர்ஜே பாலாஜி ஜோடியாக மீனாட்சி சவுத்ரி

சென்னை: ‘ரெளத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’, ‘அன்பிற்கினியாள்’ ஆகிய படங்களை இயக்கியவர், கோகுல். தற்போது அவர் இயக்கியுள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற படம், வரும் 25ம் தேதி திரைக்கு வருகிறது. ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ், லால், சின்னி ஜெயந்த், மீனாட்சி சவுத்ரி, ஆன் ஷீத்தல், ரோபோ சங்கர், கிஷன் தாஸ் நடித்துள்ளனர். ஐசரி கே.கணேஷின் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது. ‘எல்கேஜி’, ‘மூக்குத்தி அம்மன்’ ஆகிய படங்களுக்குப் பிறகு வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல், ஆர்ஜே பாலாஜி இணைந்துள்ள 3வது படம் இது. இதுகுறித்து ஆர்ஜே பாலாஜி கூறுகையில், ‘இப்படத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் தேவையான ஒரு நல்ல மெசேஜ் இருக்கிறது. மிகப்பெரிய ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் இளைஞன் ஜெயித்தானா என்பது கதை.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ஜீவா ஆகியோரை தவிர இன்னொரு பிரபலமும் சிறப்பு வேடம் ஏற்றுள்ளார். அது சஸ்பென்ஸ். படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாள், எனது கேரக்டரை உள்வாங்கி நடிப்பதற்கு சிரமமாக இருந்தது. பிறகு கோகுல் சொல்லிக் கொடுத்ததைப் புரிந்துகொண்டு நடித்தேன். சமூக கருத்துகளை சொல்லியிருக்கும் நாங்கள், அரசியல் பற்றி பேசவில்லை. காமெடியும், கருத்தும், சென்டிமெண்டும் கலந்த படம் இது. ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது’ என்றார். ‘கொலை’ என்ற படத்தில் நடித்திருந்த மீனாட்சி சவுத்ரி, தெலுங்கில் வெளியான மகேஷ் பாபுவின் ‘குண்டூர் காரம்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கோட்’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார்.

 

The post ஆர்ஜே பாலாஜி ஜோடியாக மீனாட்சி சவுத்ரி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Meenakshi Chaudhary ,RJ Balaji ,CHENNAI ,Gokul ,Sathyaraj ,Lal ,Chinni Jayant ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மூக்குத்தி அம்மன் 2; மீண்டும் அம்மனாக நடிக்க நயன்தாரா மறுப்பு