×

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சிஸ்டர்’

சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்துக்கு ‘சிஸ்டர்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். காமெடி திரில்லர் ஜானரில் இந்த படம் உருவாகிறது. துவார்கா புரொடக்‌ஷன்ஸ் பிளேஸ் கண்ணன் – ஸ்ரீலதா பிளேஸ் கண்ணன் தயாரிப்பில், இயக்குநர் ரா.சவரி முத்து இயக்குகிறார். ஜீவி பிரகாஷ் குமார், இயக்குனர்கள் அருண் ராஜா காமராஜ், சாம் ஆண்டன், ஆதிக் ரவிச்சந்திரன், எடிட்டர் ஆண்டனி ரூபன் ஆகியோர் இப்படத்தின் மோஷன் போஸ்டரை சமூக வலைதளம் மூலம் வெளியிட்டனர்.

கடந்த மாதம் துவங்கி, தீவிரமாகப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் மோஷன் போஸ்டர் வைரலாகியுள்ளது. ஒரு மருத்துவமனையில் நர்ஸாக வேலைபார்க்கும் ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் கலகலப்பான காமெடியுடன், பரப்பரப்பான திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் சுனில் ரெட்டி, சந்தான பாரதி, அர்ஜுன் சிதம்பரம், பக்ஸ், சேஷு, மாறன், ஆதித்யா கதிர், கராத்தே கார்த்தி ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

The post ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சிஸ்டர்’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Aishwarya Rajesh ,Chennai ,Yogi Babu ,Redin Kingsley ,Dwarka Productions ,Place Kannan ,Sreelatha… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கன்னடத்தில் அறிமுகம் ஆகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்