×

ஆடிஷனில் நடந்த மோசமான அனுபவம்: ஐஸ்வர்யா ராஜேஷ் பகீர்

சென்னை: தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஹீரோயின்களை மையப்படுத்திய கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யா ராஜேஷ், பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியது: சினிமாவில் எனக்கு மோசமான அனுபவங்கள் நிறைய உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு ஒரு இயக்குனர் ஆடிஷனுக்கு அழைத்து இருந்தார்.

நானும் சென்று இருந்தேன், என்னை பார்த்துவுடன், இந்தப் பெண் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாகக்கூட நடிக்க முடியாது திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று அந்த இயக்குனர் சொன்னார். அவர் அப்படி சொன்னதும் எனது மனம் வலித்தது. ஆனால் நான் அவர் சொன்னதை ஊக்கமாக எடுத்துக்கொண்டேன். போராடி ஜெயிப்பேன் என்று அன்றே முடிவு செய்தேன்.

அதே போல இயக்குனர் ஒருவரை பார்ட்டியில் சந்தித்தேன், அவரிடம் ஏதாவது ரோல் கேட்டேன். ஆனால் அவரோ எனக்கு ரொம்பவே மோசமான கதாபாத்திரத்தை கொடுத்தார். அவர்களது எண்ணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. ஆனாலும் இதுபோன்ற அவமானங்களை கடந்துதான் ஜெயித்திருக்கிறேன். இன்று ரசிகர்கள் என்னை அவர்களில் ஒருவளாக பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது. இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.

The post ஆடிஷனில் நடந்த மோசமான அனுபவம்: ஐஸ்வர்யா ராஜேஷ் பகீர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Aishwarya Rajesh Bhagir ,Chennai ,Aishwarya Rajesh ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சிறப்பாக செயல்படும் அரசு பள்ளிகள்: ஐஸ்வர்யா ராஜேஷ் பாராட்டு