×

எனக்கு கர்வம் கிடையாது இளையராஜா உருக்கம்

சென்னை: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இளையராஜா பேசியதாவது: நான் கர்நாடக சங்கீதத்தில் கைதேர்ந்தவன் இல்லை. அதனால் இசைஞானி என்ற பட்டத்துக்கு நான் தகுதியானவனா என்பது என்னை பொறுத்தவரை கேள்விக்குறிதான். ஆனால், மக்கள் என்னை இசைஞானி என அழைக்கிறார்கள். அதற்கு நான் வணங்குகிறேன். அதனால் எனக்கு எந்த கர்வமும் கிடையாது. நான் பல்வேறு விழாக்களில் ஹார்மோனியம் வாசித்தபோது மக்கள் கைதட்டி ஊக்கம் கொடுப்பார்கள். நான் சினிமா பாடல்களுக்கு தான் அப்போது வாசிப்பேன். ஒரு கட்டத்தில் அந்த கைதட்டல் யாருக்கு கிடைக்கிறது என்ற சந்தேகம் எனக்குள் எழுந்தது. நான் இசைத்த பாடல்களுக்கான மெட்டினை அமைத்தவருக்கு அந்த கைதட்டல் கிடைக்கிறது என்ற புரிதலை பெற்றேன். கர்வத்திலிருந்து எப்போதோ நான் விடுபட்டுவிட்டேன். அதனால் எந்த புகழ் மொழியும், பாராட்டுதலும் எனக்கு ஒட்டாது. எனக்கு அது குறித்த சிந்தனையே கிடையாது. நான் சிவ பக்தன். காலை 4 மணி முதல் எனது வேலை தொடங்கும். மூன்று நாட்களில் மூன்று படங்களுக்கு பின்னணி இசை அமைத்த அனுபவமும் எனக்கு உள்ளது.

The post எனக்கு கர்வம் கிடையாது இளையராஜா உருக்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ilayaraja Urukkam ,Chennai ,Ilayaraja ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஆமாம், நான் எல்லோருக்கும்...