×

திருமலையில் வரும் 25ம் தேதி முதல் அனுமன் பிறந்த இடத்தில் 5 நாட்கள் ஜெயந்தி விழா

திருமலை: திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் அனுமன் ஜெயந்தி ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் செயல் அதிகாரி தர்மா ரெட்டி நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: திருமலையில் வரும் 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை 5 நாட்களுக்கு அனுமன் ஜெயந்தி பெருவிழாவை பிரமாண்டமாக கொண்டாட விரிவான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். திருமலை அடுத்த அஞ்சனாத்திரியில் உள்ள ஆகாச கங்கையில், அனுமன் பிறந்த இடமான ஜபாலி தீர்த்தம், நாதநீராஞ்சனம், எஸ்.வி.வேதப்பள்ளி ஆகிய இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். தர்மகிரி வேதபாடசாலையில் முழுமையான சுந்தரகாண்ட அகண்ட பாராயணம் நடத்த அந்தந்த துறை அதிகாரிகள் முன்கூட்டியே ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அந்த நாட்களில் தேவஸ்தான தொலைக்காட்சியில் நான்கு மொழி சேனல்களில் நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும். இதனால் உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் இதைப் பார்க்க முடியும். அஞ்சனாத்ரி மகிமை, இதிகாச ஹனுமத்விஜயம், யோகாஞ்சநேயம், வீராஞ்சநேயம், பக்தாஞ்சநேயம் என பல்வேறு தலைப்புகளில் விவாதிக்கப்பட வேண்டும். பொறியியல், அன்னதானம், தர்ம பிரச்சார பரிஷத், எஸ்வி வேத பள்ளி, பாதுகாப்புத்துறை, மக்கள் தொடர்புத்துறை, எஸ்விபிசி துறையினர் ஏற்பாடுகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்….

The post திருமலையில் வரும் 25ம் தேதி முதல் அனுமன் பிறந்த இடத்தில் 5 நாட்கள் ஜெயந்தி விழா appeared first on Dinakaran.

Tags : days ,Jayanti festival ,Tirumala ,Hanuman ,Dharma Reddy ,Hanuman Jayanti ,Annamayya Bhavan ,Jayanti ,
× RELATED பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல்...