×

ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு கூகுள் வாலட் இந்தியாவில் அறிமுகம்

புதுடெல்லி: இந்தியாவில் ஆன்ட்ராய்டு பயனர்களுக்காக புதிய டிஜிட்டல் வாலட்டை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. தொழில்நுட்ப உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கூகுள், பணப்பரிவர்த்தனைக்காக கூகுள் பே-வை கொண்டு வந்தததைத் தொடர்ந்து, இந்தியாவின் ஆன்ட்ராய்டு பயனர்களுக்காக தற்போது ‘கூகுள் வாலட்’ எனும் டிஜிட்டல் வாலட்டை அறிமுகம் செய்துள்ளது. இதில், சினிமா டிக்கெட், லாயல்டி கார்டுகள், போர்டிங் பாஸ், பஸ், ரயில் பாஸ்கள், கிப்ட் கார்டுகள் மற்றும் டிஜிட்டல் வடிவிலான அனைத்து ஆவணங்களையும் ஒரே இடத்தில் சேமித்து வைக்கலாம். இந்த புதிய சேவையில் கூகுளுடன் ஏர் இந்தியா, இண்டிகோ, பிலிப்கார்ட், கொச்சி மெட்ரோ, பிவிஆர், ஐநாக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்துள்ளன.

The post ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு கூகுள் வாலட் இந்தியாவில் அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Google ,India ,New Delhi ,Dinakaran ,
× RELATED கூகுள் மேப்பை நம்பி...