×

13 வருடங்களுக்கு பிறகு அஜீத்துடன் இணைந்து நடிக்கும் பாவனா

சென்னை: ‘துணிவு’ படத்திற்கு பிறகு அஜீத் நடித்து வரும் படம் ‘விடாமுயற்சி’. த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா கெசன்ட்ரா உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். மகிழ்திருமேனி இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. தற்போது படத்தில் பாவனா இணைந்துள்ளார். அஜர்பைஜான் சென்றுள்ள அவர் அஜீத்துடன் இருக்கும் வீடியோ நேற்று வைரலாக பரவியது.
அந்த வீடியோவில் அஜீத் சிலருடன் பேசிக்கொண்டுள்ளார். அந்த சமயத்தில் அங்கே பாவனா வர.. அவரிடம் அஜித், ‘‘கொஞ்சம் லேட்டாகி விட்டது மன்னித்து விடுங்கள்” என்று சொல்கிறார். அப்போது பாவனா ‘‘நீங்கள் லேட்டாக வருவீர்கள் என சொன்னதால், நானும் கொஞ்சம் லேட்டாகத்தான் வந்தேன்” எனக் கூறுகிறார். பாவனாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த ஒரு பெரிய நிகழ்வுக்கு பிறகு பல வருடங்கள் நடிக்காமல் இருந்தார். தற்போது பிசியாக நடிக்கத் தொடங்கி விட்டார். 2010ம் ஆண்டு அஜீத் ஜோடியாக ‘அசல்’ படத்தில் நடித்தார். அதன்பிறகு தற்போது இந்த படத்தில் அவருடன் நடிக்கிறார்.

The post 13 வருடங்களுக்கு பிறகு அஜீத்துடன் இணைந்து நடிக்கும் பாவனா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Bhavana ,Azeem ,Chennai ,Ajit ,Trisha ,Arjun ,Aarav ,Regina Gesandra ,Anirit ,Om Prakash ,Makhtirumeni ,Azerbaijan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...