×

கணவன், மனைவி ஈகோ கதையில் அஞ்சலி நாயர்

 

சென்னை: மனம் கொத்திப் பறவை, ஜிப்சி, கழுவேர்த்தி மூர்க்கன், டாடா படங்களை தயாரித்த ஒலிம்பியா பிக்சர்ஸ் புது படம் தயாரிக்கிறது. இதில் அஞ்சலி நாயர் நடிக்கிறார். ஜீவா, அருள்நிதி நடித்த களத்தில் சந்திப்போம் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியவர் ஹேமநாதன். இவர் இயக்குனராக இந்த படத்தில் அறிமுகமாகிறார். டாடா படத்துக்கு இசையமைத்த ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார். அம்பேத்குமார் தயாரிக்கிறார். அஞ்சலி நாயர், ஆர்ஜே விஜய், மைத்ரேயன், ரெடின் கிங்ஸ்லி, கல்யாணி நடராஜன், மேத்யூ வர்கீஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள். படம் குறித்து ேஹமநாதன் கூறும்போது, ‘இது கணவன், மனைவி இடையிலான அன்பு, ஈகோ இரண்டையும் சொல்லும் கதை. கணவனாக ஆர்ஜே விஜய், மனைவியாக அஞ்சலி நாயர் நடிக்கிறார்கள். கதைப்படி ஹீரோ, ஆன்கர். அதனால் ஆர்ஜே விஜய்யை ஹீரோவாக தேர்வு செய்தேன். அதேபோல் ஹீரோயின், பாடகி. அதனால் அத்தகைய முகவெட்டு, பாடிலாங்குவேஜ் தேவைப்பட்டதால் அஞ்சலி நாயரை நடிக்க வைக்கிறோம். இது ஃபீல் குட் படமாக இருக்கும். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இன்று பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்குகிறது’ என்றார்.

The post கணவன், மனைவி ஈகோ கதையில் அஞ்சலி நாயர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Anjali Nair ,CHENNAI ,Olympia Pictures ,Manam Kothip Parvee ,Gypsy ,Awasherthi Moorgan ,Tata ,Hemanathan ,Jeeva ,Arulnidhi.… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அஞ்சலி நாயர் நடிக்கும் ஒய்ஃப்