×

2வது நார்டிக் உச்சி மாநாட்டில் 5 நாட்டு பிரதமர்களுடன் மோடி சந்திப்பு: வர்த்தக உறவை வலுப்படுத்த ஆலோசனை

கோபன்ஹேகன்: டென்மார்க்கில் நடைபெற்ற 2வது நார்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, நார்வே, சுவீடன் உள்ளிட்ட 5 நாட்டு பிரதமர்களை சந்தித்தார். அப்போது, இரு தரப்பு உறவு, வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தார்.ஐரோப்பிய நாடுகளுக்கு 3 நாள் பயணமாக கடந்த 2ம் தேதி புறப்பட்ட பிரதமர் மோடி ஜெர்மனி சென்றார். அங்கு அந்நாட்டின் அதிபர் ஓலாப் ஸ்கோல்சை சந்தித்து பேசினார். 2வது நாள் பயணமாக டென்மார்க் சென்றடைந்தார். அங்கு கோபன்ஹேகன் விமானநிலையத்தில் அவரை அந்நாட்டின் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் வரவேற்றார். இருநாட்டு தலைவர்களும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் டென்மார்கின் முதலீடு குறித்து விவாதித்தனர். அதைத்தொடர்ந்து அந்நாட்டின் ராணி 2ம் மார்கிரெத் அளித்த இரவு விருந்தில் மோடி பங்கேற்றார். அங்கு அவருக்கு அரசின் பாரம்பரிய முறைப்படியான சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, டென்மார்க்கில் 2ம் நாளான நேற்று 2வது நார்டிக் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில், டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, சுவீடன் ஆகிய 5 நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்றனர். நார்டிக் நாடுகள் நிலைத்தன்மை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றில் இந்தியாவின் முக்கியமான நட்பு நாடுகளாக உள்ளன. மாநாட்டிற்கு முன்னதாக, நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர், சுவீடன் பிரதமர் மகதலேனா ஆண்டர்சன், ஐஸ்லாந்து பிரதமர் காத்ரீன் ஜாகோப்ஸ்டோட்டிர், டென்மார்க் பிரதமர் பிரடெரிக்சன் மற்றும் பின்லாந்து பிரதமர் சன்னா மரின் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் புதிய கண்டுபிடிப்புகள், தகவல் தொழில்நுட்ப துறை முதலீடுக்கான ஒப்பந்தம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி. மீன்வளம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, டென்மார்க் பயணம் மிகச்சிறப்பாக அமைந்ததாக தனது டிவிட்டரில் குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஐரோப்பிய பயணத்தின் கடைசி கட்டமாக பிரான்ஸ் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று அவர் அந்நாட்டு அதிபர் மேக்ரானை சந்தித்து பேசுகிறார். அதைத் தொடர்ந்து நாடு திரும்புகிறார். ராஜஸ்தானில் 20ம் தேதி பாஜ உயர்நிலை கூட்டம்; பிரதமர் மோடி பங்கேற்பு: ராஜஸ்தானில் பாஜ.வின் உயர்நிலை குழு கூட்டம் வரும் 20ம் தேதி முதல் 2 நாட்கள் ஜேபி நட்டா தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் பாஜ.வின் அனைத்து மாநிலத் தலைவர்கள், பொறுப்பாளர்கள், பொதுச் செயலாளர்கள் மற்றும் கட்சியின் பல்வேறு அமைப்பு தலைவர்கள் பங்கேற்கிறார்கள். முதல் நாள் கூட்டத்தில் அனைத்து  தலைவர்களும் பங்கேற்கும் நிலையில், அடுத்த நாள் கூட்டத்தில் அனைத்து மாநில பொதுச் செயலாளர்கள் மட்டும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில தலைவர்கள் மற்றும் பொது செயலாளர்கள் அந்தந்த மாநிலங்களில் அவர்கள் மேற்கொண்ட கட்சி செயல்பாடுகள் குறித்த அறிக்கை சமர்பிக்க உத்த்ரவிடப்பட்டுள்ளது. குஜராத், இமாச்சல், கர்நாடகா மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் வியூகம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்த வகுப்புவாத பிரச்னை உள்ளிட்டவற்றை காரணம் காட்டி காங்கிரஸ் அரசுக்கு பாஜ முட்டுக்கட்டை போட முயற்சிக்கும் நிலையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. மனித ஆய்வு ரோவர் வடிவமைப்பு நாசா நடத்திய போட்டியில் தமிழக மாணவ குழு வெற்றி: வாஷிங்டன்: ‘நாசா 2022 மனித ஆய்வு ரோவர்’ போட்டியில், பஞ்சாப், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் குழுக்கள் வெற்றி பெற்றுள்ளன.அமெரிக்க விண்வெளி மையமான நாசா நடத்திய ‘நாசா 2022 மனித ஆய்வு ரோவர்’ போட்டியில், உலகளவில் இருந்து 58 கல்லூரிகள், 33 உயர்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 91 அணிகள் பங்கேற்றன. இந்த போட்டியில், சூரிய மண்டலத்தில் உள்ள பாறை நிலப்பரப்பு போன்ற செயற்கை தளத்தில் மனிதனால் இயங்கும் ரோவரை வடிவமைத்து சோதனை செய்ய வேண்டும். அதில், மாதிரிகளை எடுப்பது, ஸ்பெக்ட்ரோகிராபிக் பகுப்பாய்வு செய்தல் உள்ளிட்ட பணிகளை இந்த அணிகள் செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.இந்த போட்டியில் பள்ளிகள் அளவிலான விருதுக்கு பஞ்சாப்பை சேர்ந்த டீசன்ட்  சில்ட்ரன் மாடல் பிரசிடென்சி உயர்நிலைப் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டது.  அதேபோல், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பிரிவில் தமிழ்நாட்டின் வேலூர் இன்ஸ்டிடியூட்  ஆப் டெக்னாலஜியின் (விஐடி) குழு சமூக ஊடக பிரிவில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 29ம்  தேதி காணொலி மூலம் நடந்த நாசா விருது வழங்கும் விழாவின்போது இது அறிவிக்கப்பட்டது. …

The post 2வது நார்டிக் உச்சி மாநாட்டில் 5 நாட்டு பிரதமர்களுடன் மோடி சந்திப்பு: வர்த்தக உறவை வலுப்படுத்த ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Modi ,2nd Nordic Summit ,Copenhagen ,Norway ,Sweden ,Denmark ,
× RELATED டென்மார்க் பெண் பிரதமர் மீது தாக்குதல்: மர்ம நபரை கைது செய்தது போலீஸ்