×

முற்றுபெருமா பருத்திவீரன் சர்ச்சை?.. வருத்தம் தெரிவித்தார் ஞானவேல்ராஜா!

சென்னை: இயக்குனர் அமீர் பற்றி பேச்சுக்காக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘பருத்தி வீரன்’ பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே “அமீர் அண்ணா” என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன்.

அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான் இவ்வாறு கூறினார்.

The post முற்றுபெருமா பருத்திவீரன் சர்ச்சை?.. வருத்தம் தெரிவித்தார் ஞானவேல்ராஜா! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ghanavelraja ,Chennai ,Ghanavel Raja ,Amir ,Gnanavelraja ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்