×

ஹீரோயின் ஆனார் நாடக நடிகை

சென்னை: பெங்களூரு தமிழர் கிரண் துரைராஜ், பெங்களூரு தமிழ் கலைஞர்களை வைத்து இயக்கிய படம், ‘நவயுக கண்ணகி’. இது, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதை. பெங்களூரு தமிழ் நாடக நடிகை பவித்ரா தென்பாண்டியன் ஹீரோயினாக நடித்துள்ளார். தவிர விமல் குமார், டென்சில் ஜார்ஜ், தென்பாண்டியன், ஜெயப்பிரகாஷ் நடித்துள்ளனர். தர்மதீரன் ஒளிப்பதிவு செய்ய, கெவின் கிளிஃபோர்ட் இசை அமைக்கிறார். படம் குறித்து கிரண் துரைராஜ் கூறியதாவது:

பெங்களூருவில் திறமையான தமிழ் திரைப்பட கலைஞர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைப்பது இல்லை. கன்னட சினிமாவிலும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வர இப்படத்தை உருவாக்கினேன். பெங்களூரு அல்சூர் நாடக மன்றத்தினர் நடித்துள்ளனர். காதல் கணவனை ஆணவக்கொலை செய்த பெற்றோர்கள் மற்றும் உறவினரை பழிவாங்கும் பெண்பற்றிய கதையான இதில் நடிக்கும்படி தமிழ் மற்றும்
கன்னட நடிகைகளை அணுகிய போது மறுத்தனர்.

காரணம், பெரிய நடிகைகளே நடிக்க தயங்கும் சில காட்சிகள் இருக்கிறது. எனவே, பெங்களூருவில் ஆங்கில நாடகத்தில் நடித்த பவித்ரா தென்பாண்டியனை தேர்வு செய்து, விசேஷ பயிற்சி அளித்து நடிக்க வைத்துள்ளோம். வேலூர், காட்பாடி, குடியாத்தம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. நல்ல கதையம்சம் கொண்ட இப்படம், ஷார்ட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

The post ஹீரோயின் ஆனார் நாடக நடிகை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Kiran Durairaj ,Pavitra ,Vimal Kumar ,Denzil ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கல்லூரி மாணவி மாயம்