×

சிபி ஜோடி குஷிதா

சென்னை: கிரவுன் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.எம். இப்ராஹிம் தயாரிக்கும் படத்தை பிரகாஷ் கிருஷ்ணன் இயக்குகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. ‘வஞ்சகர் உலகம்’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் நடித்த சிபி, இப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். அவரது ஜோடியாக குஷிதா கல்லப்பு நடிக்கிறார். மற்றும் சரவணன், ஜெயப்பிரகாஷ், நிரோஷா நடிக்கின்றனர்.

‘ஜீவி’ படத்தின் வசனகர்த்தா பாபு தமிழ் வசனம் எழுதுகிறார். கோபி கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, கேபர் வாசுகி இசை அமைக்கிறார். கடந்த 20ம் தேதி சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியது.

 

The post சிபி ஜோடி குஷிதா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CB Jodi Kushita ,Chennai ,Crown Pictures ,Ibrahim ,Prakash Krishnan ,CB ,Kushita Kallappu ,CP Jodi Kushita ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அடுக்குமாடி குடியிருப்பில்...