×

தர்மபுரி அருகே 6ம் வகுப்பு மாணவனை அடித்த ஆசிரியர் கைது

நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன்(40). இவரது மகன் பிரணவ் ஆதித்யா(11). அதியமான்கோட்டையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த வாரம் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றான். அப்போது, சமூக அறிவியல் ஆசிரியரான துரைராஜ்(54) என்பவர், மாணவனிடம் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் செயல்படும் வகுப்பிற்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை என கண்டித்து அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவன் வீட்டிற்கு சென்றதும், தனது தாயாரிடம் சொல்லி அழுதுள்ளான். இதுகுறித்து அவர் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்த புகார் அடிப்படையில் விசாரணை நடத்திய அதியமான்கோட்டை போலீசார், வழக்குப்பதிந்து ஆசிரியர் துரைராஜை நேற்று கைது செய்தனர். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்….

The post தர்மபுரி அருகே 6ம் வகுப்பு மாணவனை அடித்த ஆசிரியர் கைது appeared first on Dinakaran.

Tags : Darmapuri ,Nallamampalli ,Khaliyappan ,Athyamankotta, Darmapuri District ,pranav aditya ,Anna ,Athyamangote ,
× RELATED தர்மபுரி அருகே பரபரப்பு கோவை நகைக்கடை...