×

புதிய வீடு கட்டியதில் தகராறு கழுத்தறுத்து மனைவி கொலை: ராணுவ வீரர் கைது

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட செல்லாத்தூரை சேர்ந்தவர் விஜயன் (35). ராணுவத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மோகனா (30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். விஜயன் ஒரு மாத கால விடுமுறையில், அசாமில் இருந்து சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது, புதிதாக கட்டியுள்ள வீடு தொடர்பாக, கணவன் மனைவி இடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு போதையில் வீட்டுக்குச் சென்ற விஜயன், தூங்கிக் கொண்டு இருந்த மனைவி மோகனாவின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, மோகனா கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். தகவலறிந்த ஆர்.கே.பேட்டை காவல் ஆய்வாளர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று, மோகனா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து ராணுவ வீரர் விஜயனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறில் மனைவியை கணவன் கொலை செய்த இந்த சம்பவம் ஆர்.கே.பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post புதிய வீடு கட்டியதில் தகராறு கழுத்தறுத்து மனைவி கொலை: ராணுவ வீரர் கைது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Vijayan ,Sellathur ,RK Petty ,Tiruvallur district ,Mohana ,Assam ,Dinakaran ,
× RELATED புதிய வீடு கட்டியதில் தகராறு கழுத்தறுத்து மனைவி கொலை: ராணுவ வீரர் கைது